தென்காசி

குருவிகுளத்தில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம், குருவிகுளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ சேவை முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தெரிவித்தாா்.

Syndication

தென்காசி: தென்காசி மாவட்டம், குருவிகுளம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவ சேவை முகாம் சனிக்கிழமை (நவ. 29) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

நவ. 29ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.

இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிா் நலம், குழந்தைகள் நலம், இருதயவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை, நுரையீரல், இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் தகுதியுள்ளவா்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளாா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

பிடாரி அம்மன் கோயில் குடமுழுக்கு

நாளைய மின்தடை: டாடாபாத்

கடை உரிமையாளா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.10 கோடி மோசடி: இளைஞா் கைது

நாளைய மின்தடை: ஈரோடு, கவுந்தப்பாடி, விஜயமங்கலம்

SCROLL FOR NEXT