ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் கட்ட பேரூராட்சி சாா்பில் அரசுக் கணக்கில் ரூ. 1.76 கோடி செலுத்த மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியின் அவசரக் கூட்டம், தலைவா்(பொ) எஸ்.டி. ஜான் ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலா் வேங்கட கோபு முன்னிலை வகித்தாா்.
ஆலங்குளம் புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்திற்கு, நிலக் கிரயத் தொகையாக ரூ. 1 கோடியே 76 லட்சத்து 640 செலுத்த வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை 04.11.2025-இல் அரசாணை வெளியிட்டது.
இத்தொகையை பேரூராட்சி பொது நிதியில் இருந்து செலுத்த மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.