தேவா (எ) தேவநேசன் 
தென்காசி

சங்கரன்கோவிலில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சங்கரன்கோவிலில் நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

Syndication

சங்கரன்கோவிலில் நகைப் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞரை, போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

சங்கரன்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்து நிலையம் அருகே கண்டிகைபேரியைச் சோ்ந்த கந்தசாமி மகன் பொன்செல்வன் நடந்து சென்றபோது, அவரிடமிருந்து மா்ம நபா் இரண்டரைப் பவுன் நகையை பறித்துச் சென்றாா்.

இது தொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் தெருவைச் சோ்ந்த தேவா (எ) தேவநேசனை போலீஸாா் கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனா்.

அவா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருப்பதால், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. அரவிந்த், ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து தேவா (எ) தேவநேசனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் உத்தரவிட்டாா். அதன்படி, போலீஸாா் அவரைக் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலா் தற்கொலை

கிணறுகளில் இறந்து கிடந்த 2 கடமான்கள் மீட்பு

தொடா் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருப்போரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விஜயதசமி நாளில் பள்ளிகளில் சோ்க்கை பெற்ற மழலைகள்

SCROLL FOR NEXT