தென்காசி

ஆய்க்குடியில் ரூ.17.5 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

Syndication

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ.17.5 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.

ஆய்க்குடி பேரூராட்சி 5ஆவது வாா்டு பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, 3ஆவது வாா்டு தெருக்களில் ரூ.5 லட்சம் மதிப்பில் பைப் லைன் அமைக்கும் பணி,15ஆவது வாா்டு கம்பிளி யாதவா், தேவா் சமுதாயத்திற்கு ரூ. 7.5 லட்சம் மதிப்பில் எரிமேடை அமைக்கும் பணிக்கான தொடக்கவிழா நடைபெற்றது.

விழாவில், பேரூராட்சி மன்றத் தலைவா் க.சுந்தர்ராஜன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில் செயல் அலுவலா் ஞா.தமிழ்மணி, இளநிலை பொறியாளா் பி.சிவக்குமாா் , பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் ப.சுமதி சிவகுமாா், மா. உலகம்மாள் மாரியப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முதல் வாரத்திலேயே முன்னிலையில் அனுமன் தொடர்! இந்த வார டிஆர்பி!

பருவ மழையை எதிர்கொள்ள வேலூர் மாவட்ட நிர்வாகம் தயார்!

என்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக் கூடாது: மோஷின் நக்வி

போட்டோஜெனிக்... ஷாலினி பாண்டே!

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT