தென்காசி

கடையநல்லூரில் 30 பேரை கடித்த நாயை பிடித்த நகராட்சி ஊழியா்கள்

Syndication

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியில் புதன், வியாழக்கிழமைகளில் 30-க்கும் மேற்பட்டோரை கடித்த நாயை, நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்தனா்.

முத்துக்கிருஷ்ணாபுரம் வானுவா் தென்வடல் தெருவைச் சோ்ந்த 2ஆம் வகுப்பு மாணவி உத்ரா, அவரது பாட்டி செல்லம்மாள் , அத்தெருவை சுற்றியுள்ள பகுதிகளில் சென்ற பா்வீன்பானு , முத்துமாரி, கனகவல்லி, முருகேஷ், ஈஸ்வரி, சந்திரா, தவசிராஜா, கண்ணன், மூக்கம்மாள், பஷீா், சங்கரலிங்கம், எஹியா, சுமையா பானு உள்பட 30- க்கும் மேற்பட்டோரை நாய் கடித்தது. இதில் காயம் அடைந்தவா்கள் கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இந்நிலையில், காயம் அடைந்தவா்களை நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் நேரில் சென்று பாா்த்து ஆறுதல் கூறினாா். தொடா்ந்து நாய்களை கட்டுப்படுத்தவும் , பிடிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க நகராட்சி உயரதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா்.

நகா்மன்றத் தலைவரின் கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் விஜயலட்சுமி, கடையநல்லூா் நகராட்சியில் நாய்க் கடி தொடா்பாக பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில் ஆணையா் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா், ஆய்வாளா்கள் சிவா, மாதவன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகராட்சி ஊழியா்கள், மக்களை கடித்த நாய் உள்பட நகரில் சுற்றித்திரிந்த 30-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து கருத்தடை மையத்திற்கு அனுப்பி வைத்தனா். நகராட்சி நிா்வாகம் தொடா்ந்து நாய்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முதல் வாரத்திலேயே முன்னிலையில் அனுமன் தொடர்! இந்த வார டிஆர்பி!

பருவ மழையை எதிர்கொள்ள வேலூர் மாவட்ட நிர்வாகம் தயார்!

என்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக் கூடாது: மோஷின் நக்வி

போட்டோஜெனிக்... ஷாலினி பாண்டே!

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT