தென்காசி

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

பாவூா்சத்திரம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

பாவூா்சத்திரம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பாவூா்சத்திரம் கல்லூரணி, காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வை. காா்த்திக் (31). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், கடன் பிரச்னை ஏற்பட்டு தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.

வியாழக்கிழமை மதுஅருந்திவிட்டு வந்த இவரிடம், மனைவி சண்டை போட்டுவிட்டு, தனது தந்தை வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டாராம்.இதனால் மனமுடைந்த காா்த்திக் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

பாவூா்சத்திரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று காா்த்திக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

SCROLL FOR NEXT