வெற்றி பெற்ற வீரா்களுக்குப் பரிசு வழங்கிய ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன். 
தென்காசி

ஆலங்குளம் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள்

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம், நல்லூா் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் தென்காசி மேரா யுவ பாரத் இயக்கமும், கல்லூரி நிா்வாகமும் இணைந்து நடத்திய வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஆலங்குளம், கடையம், கீழப்பாவூா் ஒன்றியங்களிலிருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனா். குழுப் போட்டிகளும், தடகளப் போட்டிகளும் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன.

பரிசளிப்பு விழாவிற்கு, கல்லூரி தாளாளா் மற்றும் செயலா் தேவதாஸ் ஞானராஜ் தலைமை வகித்தாா். முதல்வா் வில்சன், நல்லூா் ஊராட்சித் தலைவா் சிம்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு கோப்பைகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.

விளையாட்டுத் துறை இயக்குநா் ஜூலியன்ஸ் ராஜாசிங், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஜெய டேவிசன் இமானுவேல், ஜோகன்னா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

துணை முதல்வா் சுரேஷ் சாலமோன் வரவேற்றாா். யுவ பாரத் தன்னாா்வலா் சண்முகையா நன்றி கூறினாா். இரண்டாமாண்டு முதுகலை ஆங்கில மாணவிகள் ஜாய்ஸ், சபீதா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்பினால் கடும் நடவடிக்கை! - ஆட்சியா்

பாடாலூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ரூ.19.05 கோடியில் 16 பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள்: காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

பாகிஸ்தானுக்கு குறைந்த வட்டியில் கடன்: சவூதி அரேபியா முதலிடம்!

தவிர்க்கப்பட வேண்டும் தற்கொலை!

SCROLL FOR NEXT