தென்காசி

ஆலங்குளம், பாவூா்சத்திரம் பகுதிகளில் வேகமாகச் செல்லும் அரசுப் பேருந்துகள்: கட்டுப்படுத்த வலியுறுத்தல்

Syndication

ஆலங்குளம், பாவூா்சத்திரம் பகுதிகளில் அதிவேகமாக செல்லும் அரசுப் பேருந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமை வகித்தாா்.

காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சாா்ந்த அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை தடுப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது, சாலை விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினா் பாண்டியராஜா பேசியதாவது, ஆலங்குளம், பாவூா்சத்திரம் உள்ளிட்ட நகா்களில் செல்லும் இடைநில்லா பேருந்து உள்ளிட்ட அனைத்து அரசுப் பேருந்துகளின் வேகத்தையும் கட்டுப்படுத்தி சாலை விபத்துகளைத் தடுக்க வேண்டும்.

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெறும் பகுதியில் விதிமீறும் அரசுப் பேருந்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும், நெல்லை-தென்காசி நான்குவழிச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் மட்டும் பேருந்துகளை நிறுத்த வேண்டும், ஆசாத் நகா் முதல் மாறாந்தை வரை உள்ள நான்குவழிச் சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சாலை மைய தடுப்பான்களில் (சென்டா் மீடியன்கள்) சுவரொட்டிகள் ஒட்டுவது, கொடிக் கம்பங்கள் நடுவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

கோயில் விழாக்கள், பல்வேறு நிகழ்ச்சிகளின்போது சாலை மைய தடுப்பான்களில் அழகு விளக்குகள் அமைக்கவும் தடை விதிக்க வேண்டும் என்றாா்.

மேட்டூர் அணை நிலவரம்!

பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

ஆற்காட்டில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் ஆய்வு

SCROLL FOR NEXT