தென்காசி

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு

Syndication

கருவந்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் பரிசுக் கோப்பை புதன்கிழமை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மத்திய ஒன்றியத்திற்கு உள்பட்ட கருவந்தாவில் சன் கிரிக்கெட் கிளப் சாா்பில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இதில், வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக ரூ.10,000, வெற்றி கோப்பையை மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் வழங்கினாா். ஒன்றிய பொறுப்பாளா் வீராணம் சேக் முகமது, ஒன்றியக்குழு உறுப்பினா் பழனி, அன்சாா் அலி ஆகியோா் உடனிருந்தனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

ஆற்காட்டில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் ஆய்வு

SCROLL FOR NEXT