தென்காசி

செங்கோட்டையில் புதிய நுழைவாயில்: அண்ணா, கருணாநிதி பெயா் சூட்ட கோரிக்கை

Syndication

செங்கோட்டையில் அமைக்கப்படும் புதியநுழைவாயிலுக்கு அண்ணா, கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என நகர திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை நகர திமுக செயலா் ஆ. வெங்கடேசன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

தென்காசி, செங்கோட்டை நகரில் திருவிதாங்கூா் சமஸ்தானத்தினரால் அமைக்கப்பட்டிருந்த பழைமை வாய்ந்த நுழைவாயில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை அகற்றப்பட்டது.

புதிய நுழைவாயில் அமைப்பதற்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யவிருப்பதாக தெரிகிறது.

புதிய நுழைவாயிலை அவசரமாக அமைத்திடாமல், நகர எல்லையைக் கண்டறிந்து அங்கு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாமல் அமைக்க வேண்டும்.

பிரம்மாண்டமான நுழைவாயிலை அமைத்து அண்ணா, கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்!

பல் மருத்துவரிடம் ரூ.1.19 கோடி மோசடி: மேலும் ஒருவா் கைது

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

கன்னியாகுமரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

ஆற்காட்டில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினா் ஆய்வு

SCROLL FOR NEXT