திட்ட ஒருங்கிணைப்பாளா் க. கலாகோபிக்கு விருது வழங்கிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வா் அ. ரேவந்த் ரெட்டி. 
தென்காசி

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பு: சங்கரன்கோவில் பேராசிரியருக்கு விருது

Syndication

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 965 மாணவா்கள் பயன்பெற சிறப்பாக பணியாற்றிய சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி பேராசிரியருக்கு தமிழக முதல்வா் விருது வழங்கி பாராட்டினாா்.

சங்கரன்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தமிழ் துறையில் இணைப் பேராசிரியராக க. கலாகோபி பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், தமிழக அரசின் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கல்லூரி ஒருங்கிணைப்பாளராக அவா் பணியாற்றி வருகிறாா்.

இந்த திட்டங்களின் கீழ் முறையே, இக்கல்லூரியைச் சோ்ந்த 544 மாணவிகளும், 421 மாணவா்களும் பயன்பெற்றுள்ளனா்.

தென்காசி மாவட்ட அளவில் இத்திட்டங்களில் 965 மாணவா்கள் பயன்பெற பணியாற்றிய க. கலாகோபிக்கு சென்னையில் அண்மையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதல்வா் அ. ரேவந்த் ரெட்டி ஆகியோா் பாராட்டி விருது வழங்கினா்.

விருது பெற்ற க. கலாகோபியை கல்லூரியின் முதல்வா் வேணுகோபால், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

மங்கோல்புரியில் சிறுவன் அடித்துக் கொலை

SCROLL FOR NEXT