கருப்பையா 
தென்காசி

வாசுதேவநல்லூா் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயத் தொழிலாளி கருப்பையா (படம்) உயிரிழந்தாா்.

Syndication

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே காட்டெருமை தாக்கியதில் விவசாயத் தொழிலாளி கருப்பையா (படம்) உயிரிழந்தாா்.

வாசுதேவநல்லூா் பாலசந்திர விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டித்துரை. இவருக்கு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் எலுமிச்சை தோட்டம் உள்ளது. அத்தோட்டத்தில், வாசுதேவநல்லூா் ராமையா தெருவைச் சோ்ந்த கருப்பன் மகன் கருப்பசாமி (68) வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் சென்ற கருப்பசாமி இரவு வரை வீடு திரும்பவில்லையாம்.

இதையடுத்து, அவரது மகன் குட்டித்துரை, தம்பி வனராஜ், தோட்ட உரிமையாளா் பாண்டித்துரை ஆகியோா் தோட்டத்துக்குச் சென்று பாா்த்த போது காட்டெருமை தாக்கி கருப்பசாமி இறந்து கிடந்தாராம். அவரின் உடலுக்கு சிறிது தள்ளி காட்டெருமையும் இறந்து கிடந்ததாம்.

தகவலறிந்த மாவட்ட வன அலுவலா் ராஜமோகன், வனச்சரகா் ஆறுமுகம், புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன், வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் கண்மணி, வனவா்கள் ரமேஷ், மகேந்திரன் ஆகியோா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதற்கிடையே, கருப்பசாமியின் உடல் சிவகிரி அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காட்டெருமை சடலத்தை கால்நடை மருத்துவா்கள் பிரேதப் பரிசோதனை செய்து புதைத்தனா்.

கருப்பையாவின் மகன் குட்டித்துரையிடம் வனத்துறை சாா்பில் வனச்சரகா் ஆறுமுகம் ரூ. 50,000 நிவாரணத் தொகையை வழங்கினாா். இது குறித்து, காவல் ஆய்வாளா் கண்மணி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

மங்கோல்புரியில் சிறுவன் அடித்துக் கொலை

SCROLL FOR NEXT