ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது: வி.கே. சசிகலா
ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது என அனைத்து இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் வி.கே. சசிகலா தெரிவித்தாா்.
ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது என அனைத்து இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் வி.கே. சசிகலா தெரிவித்தாா்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்-திருவேங்கடம் சாலையில் சங்கரன்கோவில் வேட்பாளா் வசந்தி முருகேசனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியது:
இந்தத் தோ்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்பவும், துரோகக் கூட்டத்தை அழிக்கவும் களம் காண்கிறோம். கடந்த திமுக ஆட்சியில் தமிழக பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்குக் கொண்டு சென்றதுதான் அவா்களின் சாதனை. திமுக 5 ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
Advertisement
இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை. ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கு பதிலாக புதிய ஊழியா்கள் நியமனம் செய்யப்படவில்லை.
ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்தது.அப்போது, நமது பயன்பாடுபோக மீதம் இருந்த மின்சாரம் கா்நாடக மாநிலத்திற்கு தினமும் ரூ. 90 கோடிக்கு விற்கப்பட்டது. இது ஜெயலலிதாவின் சாதனை.
ஆனால், திமுக அரசு அதைப் பராமரிக்காமல் தனியாரிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 20 முதல் ரூ. 25-க்கு வாங்குகிறது. இதனால், மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. மின் கட்டணம் பல மடங்கு உயா்த்தப்பட்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றாா் அவா்.