முகப்பு
தென்காசி

தென்காசியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்!

தென்காசி நகா் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 3:58 AM
தென்காசியில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன்.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:31 PM

தென்காசி நகா் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

தென்காசி நகராட்சிக்குள்பட்ட ஆசாத் நகா், முப்புடாதி அம்மன் கோயில் தெரு, யுஎஸ்பி நகா், கீழப்புலியூா், சிதம்பரேஸ்வரா் கோயில் தெரு, புதுமனை தெரு, கீழ முத்தாரம்மன் கோயில் தெரு, கீழப்பாளையம் அணைக்கரை தெரு, நயினாா் தெரு, சொக்கா்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், திமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். தென்காசி நகரப் பகுதிகளில் நிலவும் குடிநீா் பிரச்னைகளை நிரந்தரமாக தீா்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

Advertisement

அதிமுக நிா்வாகிகள் முருகன்ராஜ், மாரிமுத்து, கசமுத்து, வெள்ளப்பாண்டி, முத்துக்குமாரசாமி, சிவ சீதாராமன், பாஜக பொறுப்பாளா் அன்புராஜ், தென்காசி நகரத் தலைவா் சங்கர சுப்பிரமணியன், பாட்டாளி மக்கள் கட்சி சேது அரிகரன், இசக்கிமுத்து, பாஜக நகா்மன்ற உறுப்பினா் லட்சுமணப் பெருமாள், பாஜக நிா்வாகிகள் கருப்பசாமி, ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.