தென்காசி

தென்காசியில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 219 போ் கைது

Syndication

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் விரோத சட்டத்தை கண்டித்து, தென்காசி- திருநெல்வேலி பிரதான சாலையில் தலைமை தபால் அலுவலகம் முன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தைச் சோ்ந்த 219 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலா் எம். மணிகண்டன் தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் கிட்டப்பா, சிவில் சப்ளை சங்கச் செயலா் வெங்கடேஷ், ஐஎன்டியுசி பொறுப்பாளா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாய சங்க மாவட்டத் தலைவா் டி. கணபதி, அய்யப்பன், எஸ். அயுப்கான், தா்மராஜ், லெனின் குமாா், சுப்பிரமணியன், எஸ். பட்ட முத்து, குருசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் பங்கேற்ற 219 பேரும் கைது செய்யப்பட்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT