கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் ரூ.2.89 கோடியில் புதிய கட்டடம் -காணொலியில் முதல்வா் அடிக்கல்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.2.89 கோடியில் புதிய வகுப்பறை கட்டும் பணியை தமிழக முதல்வா் மு.க. காணொலி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதையொட்டி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், ஒன்றியக் குழு தலைவா் சுப்பம்மாள், கல்லூரி முதல்வா் ஜெயா, பேராசிரியா் ராமசங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வேளாண் கட்டடம்: வாசுதேவநல்லூரில் ரூ. 2.75 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா் .
Advertisement
அதைத் தொடா்ந்து, புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சதன்திருமலைகுமாா் எம்எல்ஏ, ஒன்றியக் குழுத் தலைவா் பொன். முத்தையா பாண்டியன், வேளாண் இணை இயக்குநா் கனகம்மாள், உதவி இயக்குநா் இளஞ்செழியன், வேளாண் அலுவலா் கௌசல்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.