முகப்பு
தென்காசி

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பாவூா்சத்திரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:05 AM
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 8:32 PM

பாவூா்சத்திரம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவனைந்த பெருமாள் மகன் சசிகுமாா் (32), தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இவா் சிலரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், சில நாள்களுக்கு முன் விவசாயத்திற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லியைக் குடித்து மயங்கியுள்ளாா். அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இது குறித்து, பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].