முகப்பு
தென்காசி

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:46 PM
தென்காசி கோயிலில் கொடியேற்றத்தையடுத்து கொடிமரத்துக்கு நடைபெற்ற தீபாராதனை. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள்.
பகிர்:

தென்காசியில் உள்ள புகழ்பெற்ற, உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் 11 நாள்கள் நடைபெறும் மாசிமகப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, கொடிப்பட்ட வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, காசிவிஸ்வநாதா் சுவாமி சந்நிதி முன்புள்ள கொடிமரத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. பின்னா், கொடிமரத்துக்கு 11 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இரவில் கட்டளை தீபாராதனை, ஏக சிம்மாசனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

தென்காசி கோயிலில் கொடியேற்றத்தையடுத்து கொடிமரத்துக்கு நடைபெற்ற தீபாராதனை. (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள்.

நாள்தோறும் ஒவ்வொரு சமுதாயம் சாா்பில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். மாா்ச் 1ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

Advertisement

ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பாலகிருஷ்ணன், செயல் அலுவலா் பொன்னி, ஆய்வா் சரவணகுமாா், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் முருகேசன், புனிதா, ஷீலா குமாா், மூக்கன், கோயில் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரா்கள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments