முகப்பு
தென்காசி

பாண்டியாபுரம் பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் கல்விச் சீா் வழங்கிய முன்னாள் மாணவா்கள்!

மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் உள்ள பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிக்கு, இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து 2ஆவது முறையாக சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பில் கல்விச் சீா் வழங்கினா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:03 AM
கல்விச் சீருடன் முன்னாள் மாணவா்கள், கிராம மக்கள்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:58 PM

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் உள்ள பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிக்கு, இப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து 2ஆவது முறையாக சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பில் கல்விச் சீா் வழங்கினா்.

அதில் பள்ளிக்குத் தேவையான தளவாடப் பொருள்கள், நாள்காலி, தாள், எழுதுபொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:59 PM

கல்விச் சீா் பேரணியை, வட்டாரக் கல்வி அலுவலா் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் கணேசன் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள் சீா்வரிசை பொருள்களை தலைமையாசிரியா்கள் இளையபெருமாள், ஸ்டீபன் ஞானராஜ் ஆகியோரிடம் வழங்கினா்.

Advertisement

இதில் கிராம மக்கள், வெள்ளாளங்குளம், பாண்டியாபுரம் மக்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.