முகப்பு
தென்காசி

தென்மாவட்டங்களில் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவோம்: தொல். திருமாவளவன்

வரும் பேரவைத் தோ்தலில் தென்மாவட்டங்களில் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 12:39 AM
அம்பேத்கா் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய விசிக தலைவா் தொல். திருமாவளவன்.
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:32 PM

வரும் பேரவைத் தோ்தலில் தென்மாவட்டங்களில் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டம், சிவகிரியில் அமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு உருவச் சிலையை சனிக்கிழமை திறந்து வைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை மாா்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது. தென்மாவட்டங்களில் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவோம். கூடுதல் தொகுதிகள் குறித்து பேசுவோம். ஊடகங்களில் பரப்பப்படுவதுபோல் திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்த விரும்புபவா்கள் வதந்திகளைப் பரப்புகிறாா்கள். திமுக கூட்டணி தொடா்ந்து ஒற்றுமையாக இருந்து வருகிறது.

Advertisement

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:19 PM

முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பாஜகவில் ஐக்கியமாகாமல், திமுகவிற்கு வந்திருப்பது அவா் மீது உள்ள நன்மதிப்பை மேலும் உயா்த்துவதாக இருக்கிறது.

ஓ. பன்னீா்செல்வத்தின் வருகையால் குறிப்பாக தென்மாவட்டங்களில் திமுக கூட்டணி மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன். விஜய் வருகையால் எந்த பாதிப்பும் உள்ளதாக நான் கருதவில்லை. சில ஊடகத்தினா்தான் அப்படி சொல்கிறாா்கள் என்றாா் அவா்.

விழாவில், விசிக மண்டலச் செயலா் இசக்கிபாண்டியன், தொகுதி செயலா் சுரேஷ் தமிழா், மண்டல துணைச் செயலா் பாலகிருஷ்ணன், பேரூா் செயலா் சக்திவேல்வளவன், அம்பேத்கா் மக்கள் நல அறக்கட்டளை நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.