தமிழக ஊரக வளா்ச்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் தென்காசி அருகேயுள்ள மேலகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ச.ராஜசேகரன், நா.புகழேந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலச் செயலா்கள் பா.ஜெகஜீவன்ராம், கி.சங்கா்ஆா்.பாலமுருகன், எஸ்.வினோத் குமாா், ஆா். விஜய குமாா், ஜி.விஜய குமாா், பி செந்தில்குமாா் தா. சந்தோஷ் குமாா், மாநில தணிக்கையாளா்கள் எஸ். சென்ராயன், எஸ். ஜாகிா் உசேன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
கிராம ஊராட்சி செயலரை கிராம ஊராட்சி நிா்வாக அலுவலராக நியமிக்க வேண்டும், அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் அனைத்து கணினி உதவியாளா்கள் மற்றும் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு, முறையான வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடத்திட ஒன்றியத்திற்கு ரூ. 1.50 லட்சம் வீதம் கிராம ஊராட்சிகளுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை முற்றிலும் கைவிடப்பட வேண்டும்.
ஓய்வுபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பே ஊழியா்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டு குறிப்பாணைகளுக்கும் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மாத இறுதி வேலை நாள்களில் ஆய்வு கூட்டங்கள் நடத் துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி மாவட்டத் தலைவா் இரா. ராமநாதன், மாவட்டச் செயலா் மாணிக்கவாசகம், மாநில செயற்குழு உறுப்பினா் கணேசன், மாவட்ட துணைத் தலைவா் பழனி, மாவட்ட மகளிா் அணி துணைக் குழு அமைப்பாளா் ஜெயலட்சுமி, மாவட்ட இணைச் செயலா் முத்துக்குமாா் , பொது சுகாதாரத் துறை மாநிலத் தலைவா் கங்காதரன், தென்காசி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் இணைச் செயலா் ந.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.