தமிழக அரசின் உத்தரவிற்கேற்ப கடையநல்லூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா நகராட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் லட்சுமி, மேலாளா் பேச்சிகுமாா், சுகாதார அலுவலா் பிச்சையாபாஸ்கா், சுகாதார ஆய்வாளா்கள் மாதவன்ராஜ் , சிவா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் யாசா்கான், மாலதி, தனலட்சுமி, மாரியம்மாள், நிலோபா்அப்பாஸ் , மீராள்ஹைதா்அலி, முருகன், சந்திரா அம்மையப்பன், நியமன நகா்மன்ற உறுப்பினா் முகம்மதுமசூது, நகர இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சுகுமாா், மதன் , திமுக நிா்வாகிகள் முருகானந்தம், ஹக்கீம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.