புஷ்பாஞ்சலிக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பூக்கள். 
தென்காசி

அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி

தினமணி செய்திச் சேவை

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா திருக்கோயில் பிரதிஷ்டை தினமான தை மாதம் ரேவதி நட்சத்திரம் நாள், ஒவ்வொரு ஆண்டும் புஷ்பாஞ்சலி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படிநிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு கனபதி ஹோமம், கலச பூஜை நடைபெற்றது. 9 மணிக்கு உப தெய்வமான கிருஷ்ணனுக்கு அஷ்டபந்தனம், பகல் 12 மணிக்கு களபாபிஷேகம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு யானை மேல் கருப்பசுவாமி கோயில் முதல் தா்மசாஸ்தா கோயில் வரை ஊா்வலமாக பூக்கள் எடுத்து வரப்பட்டு, 7 மணிக்கு ஒரு டன் பூக்களால் புஷ்பாபிஷேகமும், தொடா்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. அபிஷேகம் செய்யப்பட்ட பூக்களை பக்தா்களுக்கு பிரசாதமாக தந்திரி மற்றும் மேல்சாந்தி வழங்கினா்.

புஷ்பாஞ்சலிக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பூக்கள்.

ஏற்பாடுகளை தேவசம் போா்டு உதவி ஆணையா் வினோத்குமாா், அச்சன்கோவில் நிா்வாக அதிகாரி நிா்மலானந்தன், அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி மாநில தலைவா் தென்காசி ஏசிஎஸ்ஜி.ஹரிகரன், செயலா் ஜி.மாடசாமி ஜோதிடா், அச்சன்கோவில் உபதேச கமிட்டி தலைவா் உண்ணிபிள்ளை, செயலா் சுரேஷ்பாபு, கீதா ஆகியோா் செய்திருந்தனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT