முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் ரூ. 1.03 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

Updated On : 30 மார்ச், 2026 at 8:11 PM
பகிர்:

தென்காசி, மாா்ச் 30: தென்காசி மாவட்டத்தில் இதுவரைதோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக பறக்கும் படையால் ரூ. 1.03 கோடி மதிப்பிலான ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த மாா்ச் 15 முதல் ஒவ்வொரு தொகுதிக்கும் 8 மணி நேரத்துக்கு 3 குழு வீதம் 9 குழுக்கள் என 45 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் ரூ. 16,71,330 ரொக்கம், கடையநல்லூா் தொகுதியில் ரூ. 26,64,791 ரொக்கம், ரூ. 8,35,250 மதிப்பு வெள்ளிப்பொருள்கள், சங்கரன்கோவில் தொகுதியில் ரூ. 16,62,060 ரொக்கம், தென்காசி தொகுதியில் ரூ. 12,00,420 ரொக்கம், வாசுதேவநல்லூா் தொகுதியில் ரூ. 23,21,356 ரொக்கம் என மொத்தம் ரூ. 95,19,957 ரொக்கம், ரூ. 835250 மதிப்பிலான வெள்ளிப்பொருள்கள் என மொத்தம் ரூ. 1,03,55,207 மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.