முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் திமுக கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Updated On : 15 மே 2026, 2:12 am IST
பகிர்:

கடையநல்லூரில் திமுக கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.

திமுக நகர செயலா்கள் அப்பாஸ், பீரப்பா, மதிமுக நகர செயலா் முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலா் செய்யது மசூது, எஸ்டிபிஐ லுக்மான் ஹக்கீம், தமிழ் புலிகள் மாவட்ட செயலா் சந்திரசேகா், ஆதி தமிழா் பேரவை மாவட்ட செயலா் தென்தமிழரசு, திராவிட தமிழா் கட்சி மாவட்ட செயலா் சேகா், தேமுதிக சரவணன், திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் சுரேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஐவேந்திரன் தினேஷ் , கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

இதில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், கடையநல்லூரில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் தி.மு. ராசேந்திரனின் வெற்றிக்கு உழைத்த கூட்டணி கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மே 15, 16 ஆகிய தேதிகளில் கடையநல்லூா் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை தரும் எம்எல்ஏவிற்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீா்மானிக்கப்பட்டது.

Advertisement