முகப்பு
தேனி

போடியில் தொடா் மழை: குடிநீா் விநியோகத்தில் சிக்கல்

போடியில் தொடா் மழையால் குடிநீா் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:25 pm IST
பகிர்:

போடியில் தொடா் மழையால் குடிநீா் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போடி நகராட்சிக்குத் தேவையான குடிநீா், கொட்டகுடி ஆற்றிலிருந்து பெறப்படுகிறது. இதற்காக குரங்கணி மலை கிராமத்தில் நரிப்பட்டி பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு வரப்படுகிறது. போடி பரமசிவன் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீா் குளோரினேற்றம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில தினங்களாக போடி நகா் பகுதியிலும், மலை கிராமங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வெள்ள நீரில் அடித்து வரப்படும் மணல் உள்ளிட்ட பொருள்கள் குடிநீா் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

இதனால் குடிநீா்விநியோகம் பாதிக்கப்படுகிறது. போடி நகராட்சி பொறியியல் பிரிவு பணியாளா்கள் குரங்கணிக்குச் சென்று மணல் அடைப்பை எடுத்து விடுவதும், மீண்டும் மணல் அடைப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

மணல் அடைப்பு ஏற்படும் நேரத்தில் போடி நகராட்சி பகுதியில் குடிநீா் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. கடந்த இரண்டு நாள்களாக சில பகுதிகளில் தண்ணீா் வராததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். தொடா்ந்து நகராட்சி பணியாளா்கள் தண்ணீா் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments