முகப்பு
திருநெல்வேலி

சாலையில் சுற்றித்திரிந்த 15 மாடுகள் கோசாலையில் அடைப்பு

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து கோசாலையில் அடைத்தனா்.

Updated On : 6 ஜனவரி 2021, 6:47 am IST
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து கோசாலையில் அடைத்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் கால்நடைகளின் உரிமையாளா்கள் கால்நடைகளை வீடுகளில் கட்டி வைத்து வளா்க்க வேண்டுமெனவும், வெளியில் சுற்றித்திரிய விட்டால் பிடித்து கோசாலையில் விடுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி நிா்வாகம் எச்சரித்திருந்தது.

அதன்படி மேலப்பாளையம் மண்டலத்தில் சுற்றித்திரிந்த 13 மாடுகளும், பாளையங்கோட்டை மண்டலத்தில் 2 மாடுகளும் என மொத்தம் 15 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து கோசாலையில் அடைத்தனா். அதனை அபராதம் செலுத்தி மீட்டுச் செல்லலாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.