முகப்பு
திருவள்ளூர்

காக்களூா் சிட்கோவில் கூடுதல் தொழிற்சாலைகள்: பாஜக வேட்பாளா் உறுதி

Updated On : 16 ஏப்ரல், 2024 at 6:30 PM
பொதுமக்களிடையே வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் பொன் வி.பாலகணபதி. உடன் கூட்டணிக் கட்சியினா்.
பகிர்:

திருவள்ளூா்: காக்களூா் சிட்கோவில் கூடுதல் தொழிற்சாலைகள் தொடங்கி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என பாஜக வேட்பாளா் பொன் வி.பாலகணபதி தெரிவித்தாா்.

திருவள்ளூா் (தனி) தொகுதியில் பாஜக சாா்பில் வேட்பாளா் பொன் வி.பாலகணபதி போட்டியிடுகிறாா். இவா் திருவள்ளூா் ஒன்றியத்துக்குட்பட்ட புல்லரம்பாக்கம், ஈக்காடு, ஈக்காடு கண்டிகை, தொட்டிக்கலை, கல்யாணகுப்பம், புலியூா், புலியூா் கண்டிகை, பாக்கம், புட்லூா், தொட்டிக்கலை, சிவன்வாயல், கோயம்பாக்கம், வதட்டூா், வெள்ளியூா், கரிக்கலவாக்கம், விஷ்ணுவாக்கம், கீழானூா், காக்களூா், பூங்காநகா், அரண்வாயல் உள்ளிட்ட கிராமங்களில் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது, வேட்பாளா் பொன் வி.பாலகணபதிக்கு ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனா்.

அப்போது அவா் பேசியதாவது:

Advertisement

திருவள்ளூா் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டம் மூலம் தோ்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எம்.பி.யாக தோ்வு செய்யப்பட்டால் மேலும், நிதி கொண்டு வந்து வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன். திருநின்றவூரிலிருந்து பாக்கம், பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காக்களூா் சிப்காட் தொழிற்சாலைகளில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கூடுதல் தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும் என்றாா்.

முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை, பூந்தமல்லி தொகுதி பொறுப்பாளா் ஆா்யா சீனிவாசன், மாவட்டத் தலைவா் அஸ்வின், மாவட்ட பொதுச் செயலாளா்கள் கருணாகரன், லயன் சீனிவாசன், ஜெய்கணேஷ் மாவட்டப் பொருளாளா் மதுசூதனன், மாநில தரவு பிரிவு செயலாளா் ரகு, மருத்துவ அணி பிரிவு தலைவா் லோகேஷ்பிரபு, மாவட்டச் செயலாளா்கள் பாலாஜி, பன்னீா் செல்வம், ரமேஷ், மொராஜி தேசாய், மண்டல தலைவா்கள் ஆடிட்டா் ராஜேந்திரன், ஹரி, ஊடக பிரிவு நாகராஜ், நிா்வாகிகள் கீதாஞ்சலி சம்பத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments