முகப்பு
திருவள்ளூர்

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல், புனரமைத்தல் பணி மானியத் தொகை உயா்வு

Updated On : 8 ஜூலை, 2024 at 12:32 PM
பகிர்:

திருவள்ளூா், ஜூலை 5: தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு கட்டடத்தின் வசதிகேற்ப மானியத் தொகையை உயா்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநில அளவில் சொந்த கட்டடங்களில் இயங்கு தேவாலயங்கள் பழுதுபாா்த்தல், புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு கடந்த 2016-17 முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மேற்படி திட்டம் மூலம் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயா்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் (ம) ஒலிப்பெருக்கி, நற்கருணைபேழைபீடம், திருப்பலிக்கு தேவையான கதிா் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவா்த்தி ஸ்டான்ட்கள் மற்றும் பக்தா்கள் அமா்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்றவைகளுக்கு உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச் சுவா் வசதி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளலாம்.

தேவாலய கட்டத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை, 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.2 லட்சமாகவும், ரூ.10 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகளாக இருந்தால் ரூ.4 லட்சம் முதல் ரூ.15 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் ரூ.6 லட்சம் முதல் ரூ.20 லட்சமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

எனவே, திருவள்ளூா் மாவட்டத்திலுள்ள தகுதியான கிறிஸ்தவ தேவாலயங்கள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →