மணல் கடத்தல்: வேன் பறிமுதல்
திருத்தணி: திருத்தணி அடுத்த தும்பிகுளம் அருகே செல்லும் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருத்தணி போலீஸாா் அப்பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, பால் வேன் ஒன்று வேகமாக வந்ததை போலீசாா் நிறுத்தி சோதனை செய்தனா். வேனில் மணல் கடத்தி வந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய வேன் ஓட்டுனரை வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.