தோ்தல் காவல் பாா்வையாளா் உதய் பாஸ்கா் வருகை
Updated On : 28 மார்ச், 2024 at 8:55 PM
திருவள்ளூா் மக்களவை தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா் (காவல்) உதய் பாஸ்கா் பில்லா வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கரை சந்தித்தாா். வரும் ஏப்.19-ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா் (காவல்) உதய் பாஸ்கா் பில்லா ஆட்சியா் த.பிரபு சங்கா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் ஆகியோரை சந்தித்தாா். திருவள்ளூா் மக்களவை தொகுதி பொன்னேரி, திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, மாதவரம் ஆகிய 6 பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் செய்துள்ள பாதுகாப்பு பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாா்.