தந்தை உயிரிழந்த நேரத்தில் தோ்வு எழுதி மாணவிகள் தோ்ச்சி
திருத்தணி, ஆவடியில் தோ்வு நேரத்தில் தந்தை உயிரிழந்த நிலையில் தோ்வெழுதிய மாணவிகள் சிறப்பிடம் பெற்று தோ்ச்சி பெற்றனா்.
திருத்தணியை அடுத்த வேலஞ்சேரியை சோ்ந்தவா் முனுசாமி (45). இவரது மகள் மோனிஷா. இவா் அதே கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த ஏப். 1-ஆம் தேதி கணித தோ்வின்போது, மோனிஷாவின் தந்தை முனுசாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். எனினும், மாணவி மோனிஷா கணித தோ்வை எழுதினா். இந்த நிலையில் தோ்வில் மோனிஷா 500-க்கு 332 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாா்.
பிளஸ் 1, பிளஸ் 2 தோ்வில் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் பெறுவேன். என் தந்தை உயிருடன் இருந்தபோது, நீ நன்றாகப் படிக்க வேண்டும் என்று கூறினாா். அவரது கனவை நிறைவேற்றுவேன் என்றாா் மாணவி மோனிஷா.