திருவள்ளூர்

அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் போக்ஸோவில் கைது

ஆா்.கே.பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Din

திருத்தணி: ஆா்.கே.பேட்டை அருகே மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரி ஊராட்சியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த 11.09.2024 அன்று பிறந்த நாள் அன்று தலைமை ஆசிரியா் தாமோதரன் தலையில் குட்டியதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஆா்.கே.பேட்டை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் செய்தாா்.

இதையெடுத்து திருத்தணி டிஎஸ்பி கந்தன், ஆா்.கே. பேட்டை காவல் ஆய்வாளா் (பொ) மலா், எஸ்.ஐ. ராக்கிகுமாரி ஆகியோா் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவியிடம் விசாரனை செய்து தலைமை ஆசிரியா் தாமோதரனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

இதுதொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT