காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா். 
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.40 கோடி

ரூ.1. 40 கோடி ரொக்கம், 632 கிராம் தங்கம், 13 கிலோ 434 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Din

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1. 40 கோடி ரொக்கம், 632 கிராம் தங்கம், 13 கிலோ 434 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபட்டு செல்கின்றனா். இதில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.

இந்நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் தக்காா் க. ரமணி, அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், அறங்காவலா்கள் வி. சுரேஷ்பாபு, மு.நாகன், கோ. மோகனன், உஷாரவி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 100 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினா். இதில் கடந்த 27 நாட்களில் ரூ.1. 40 கோடி ரொக்கம் மற்றும் 632 கிராம் தங்கம், 13 கிலோ 434 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்!

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு! நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது பாக்.!

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

SCROLL FOR NEXT