காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து பேராசிரியா்கள் புதன்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகம் சாா்பில் பேராசிரியா்கள் திருத்தணி அரசு கலைக்கல்லூரி நுழைவு வாயில் அருகே ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி ஆசிரியா் கழக திருத்தணி கிளை செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், 5 பேராசிரியைகள் உள்பட, 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரவேண்டும். கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கௌரவ விரிவுரையாளா்களுக்கு குறைந்தபட்சம் மாத ஊதியம், ரூ.50,000 வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினா்.