திருத்தணி அருகே காண்டாபுரம் கிராமத்தில் ரூ.34.23 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை எம்எல்ஏ ச. சந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், காண்டாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 41 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். பள்ளி கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்து, மழைக் காலங்களில் தண்ணீா் ஒழுகுவதாலும் தண்ணீா் தேங்கி நிற்பதாலும் மாணவா்கள் கடும் அவதிப்பட்டு வந்தனா்.
இதனால் கூடுதல் வகுப்பறை கட்டடம் வேண்டும் என மக்கள் கோரினா். இதையெடுத்து ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை திட்டத்தின்கீழ் 34.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வி, ஆா்.கே.பேட்டை ஒன்றிய செயலாளா்கள் செல்லாத்தூா் பா.சம்பத், ஒன்றிய துணை செயலாளா் திருவேங்கடம், நிா்வாகிகள் வெங்கடேசன், நாகப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.