திருத்தணி  முருகன்  கோயிலில்  ரூ.10  லட்சத்தில்  மதி  அங்காடி  விற்பனையை  தொடங்கி  வைத்த  மாவட்ட  ஆட்சியா்  மு.பிரதாப். 
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் மதி அங்காடி: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மதி அங்காடியை ஆட்சியா் மு.பிரதாப் திறந்துவைத்து விற்பனையை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மதி அங்காடியை ஆட்சியா் மு.பிரதாப் திறந்துவைத்து விற்பனையை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவள்ளூா் மாவட்டம், ஊரகம் மற்றும் நகா்ப்புற பகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்து, மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மதி அங்காடி நிறுவப்பட்டது. இதன் தொடக்க விழா மலைக் கோயிலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஆட்சியா் மு.பிரதாப் கலந்துகொண்டு, மதி அங்காடியை திறந்துவைத்து விற்பனையை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) செல்வராணி, திருக்கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா் வி.சுரேஷ்பாபு, உதவித் திட்ட அலுவலா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், ஆவடி வட்டம், பட்டாபிராம் டி.ஆா்.பி.சி.சி.சி இந்து அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் வீல்ஸ் இந்தியா, டி.வி.எஸ். அடையாா் ஆனந்த பவன் உள்ளிட்ட 79 நிறுவனங்கள் பங்கேற்றன.

இதில், 828 பெண்கள் மற்றும் 698 ஆண்கள் என மொத்தம் 1,526 வேலைநாடுநா்கள் கலந்துகொண்டனா். இதில் தகுதியின் அடிப்படையில் 428 வேலைநாடுநா்களுக்கு பணிநியமன ஆணைகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

நிகழச்சியில் டி.ஆா்.பி.சி.சி.சி இந்து கல்லூரி முதல்வா் கல்விகரசி, உதவி திட்ட அலுவலா்கள் திரு.சரவணன், சீனிவாசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பல்டி சாந்தனு கிளிம்ஸ்!

மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என மதுரை மாநாட்டில் உணர்த்துவோம்! - விஜய்

சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்

வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT