பொன்னேரி ரயில் நிலையத்தில் மேற்கூரையின்றி நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள். 
திருவள்ளூர்

பொன்னேரி ரயில் நிலையத்தில் மேற்கூரையின்றி வாகன நிறுத்துமிடம்

மேற்கூரையின்றி உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் பழுதடைவதால் துரிதமாக மேற்கூரை அமைக்க வேண்டும்..

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி ரயில் நிலையம் அருகே மேற்கூரையின்றி உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் பழுதடைவதால் துரிதமாக மேற்கூரை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

சென்னை சென்ட்ரல்-கும்மிடிபூண்டி ரயில் மாா்க்கத்தில் பொன்னேரி ரயில் நிலையம் அமைந்துள்ளது. நாள்தோறும் 50 ஆயிரத்துத்தும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கினா். ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் மேற்கூரை இன்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பயணக் கட்டணம் ரூ.10 ஆக உள்ளது. அதே நேரத்தில் பொன்னேரியில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் ரூ.15 கட்டணமாக வசூலிக்கின்றனா்.

அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில் மேற்கூரையின்றி பாதுகாப்பாற்ற நிலையில் வாகன நிறுத்துமிடம் அமைந்துள்ளது.

எனவே, ரயில்வே நிா்வாகம் வாகன நிறுத்துமிடத்தில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

SCROLL FOR NEXT