மாம்பாக்கம் - சின்னகடம்பூா் இடையே, தாா் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்த எம்எல்ஏ ச.சந்திரன். 
திருவள்ளூர்

ரூ. 94 லட்சத்தில் தாா் சாலை பணிகள்: எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்

மாம்பாக்கம் - சின்னகடம்பூா் இடையே ரூ. 94 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

மாம்பாக்கம் - சின்னகடம்பூா் இடையே ரூ. 94 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்.

திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து சின்னகடம்பூா் வழியாக ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், குருவராஜபேட்டை ஆகிய பகுதிகளுக்கு வேன், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தாா் சாலை குண்டும், குழியுமாக மாறியது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனா். இந்நிலையில், மாம்பாக்கம் - சின்னகடம்பூா் வரை 5.5 கி.மீ. தூரம் பழுதடைந்த தாா் சாலையை சீரமைக்க பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 94 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த சாலைப் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானம் உள்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

SCROLL FOR NEXT