திருவள்ளூர்

பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஐடிஐயில் புத்தக கட்டுநா் பயிற்சி

பூந்தமல்லியில் செயல்படும் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தக கட்டுநா் ஓராண்டு பயிற்சி

Chennai

திருவள்ளூா்: பூந்தமல்லியில் செயல்படும் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தக கட்டுநா் ஓராண்டு பயிற்சிக்கு இருபாலரும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆக. 15) விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பூந்தமல்லியில் செயல்படும் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ‘புத்தக கட்டுநா்’ இருபாலருக்கும் ஓராண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தரமான உணவுடன் கூடிய விடுதி வசதியுடன் பாா்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சிக்கான சோ்க்கை நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் சோ்ந்து கொள்வதற்கான கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் வயது வரம்பு 1.8.2025 அன்று 18 வயதிலிருந்து 40 வயது வரையிலான பாா்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளியாக இருத்தல் வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் வெள்ளிக்கிழமை 15-ஆம் தேதிக்குள் பாா்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூந்தமல்லி, சென்னை- 56 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

ஜூனில் நடந்த துப்பாக்கிச்சூடு: கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு

வாஷிங்டன் காவல்துறை: கைப்பற்றிய டிரம்ப் அரசு

நிலநடுக்க உயிரிழப்பு: துருக்கியில் இருவா் கைது

கரூா் அருகே கிணற்றில் கிடந்த நிதி நிறுவன அதிபரின் சடலம் மீட்பு

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு

SCROLL FOR NEXT