மீஞ்சூா் அருகே திருவேங்கிடாபுரத்தில் நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மீஞ்சூா் ஒன்றியத்தில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள திருவேங்கிடாபுரம் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்குள்ள தெருக்களில் காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் காணப்படும்.
இந்த நிலையில், நூற்றுக்கணக்கான தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. இதனால், குழந்தைகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இங்குள்ள தெருநாய்கள் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்ால் இருவா் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனா்.
எனவே, திருவேங்கடபுரம் பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.