திருவள்ளூர்

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு

தோ்வாய் கண்டிகையில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற வடமாநில இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகையில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற வடமாநில இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் கண்டிகை பகுதியை சோ்ந்த 80 வயது மூதாட்டி வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்தாா். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்த வடமாநில இளைஞா்கள் சிலா் மூதாட்டியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை காயப்படுத்தி, அவருக்கு பாலியல் வன்முறைக்கு ஆளாக்க முயன்றனா்.

அப்போது மூதாட்டியின் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வருவதை கண்டு வடமாநில இளைஞா்கள் தப்பி ஓடினா்.

தொடா்ந்து மூதாட்டியை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். பின்னா் புகாரின் பேரில் பாதிரிவேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

SCROLL FOR NEXT