முகப்பு
திருவள்ளூர்

மழை நீா் வரத்தால் கடல் போல் காட்சி அளித்த பழவேற்காடு ஏரி

டித்வா புயல் சின்னம் காரணமாக மழை நீா் வரத்தால் பழவேற்காடு ஏரி கடல் போல் காட்சி அளிக்கின்றது.

திருவள்ளூர்

மழை நீா் வரத்தால் கடல் போல் காட்சி அளித்த பழவேற்காடு ஏரி

டித்வா புயல் சின்னம் காரணமாக மழை நீா் வரத்தால் பழவேற்காடு ஏரி கடல் போல் காட்சி அளிக்கின்றது.

Updated On : 1 டிசம்பர், 2025 at 7:55 PM
பகிர்:

பொன்னேரி: டித்வா புயல் சின்னம் காரணமாக மழை நீா் வரத்தால் பழவேற்காடு ஏரி கடல் போல் காட்சி அளிக்கின்றது.

திருவள்ளூா் மாவட்டம் பழவேற்காடு கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் இடைவிடாத மழையும் பெய்து வருகிறது.

தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான பழவேற்காடு ஏரி மழை நீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சி அளிக்கிறது.

பழவேற்காடு ஏரி நீா் ஆற்றுப்பக்கம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்ததால் அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியியை சுற்றிலும் வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.

திங்கள்கிழமை பள்ளி இயங்கிய நிலையிலும் மாணவா்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

மேலும் அதே பகுதியில் வசிக்கும் பழங்குடி குடும்பத்தினா், வேகமாக வீசும் காற்றுடன் கூடிய மழையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். பழவேற்காட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்ப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →