திருவள்ளூர்

பைக் மீது காா் மோதி விபத்து: 3 போ் காயம்

ஆா்.கே.பேட்டை அருகே பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: ஆா்.கே.பேட்டை அருகே பைக் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அடுத்த பெருங்காஞ்சி கிராமத்தைச் சோ்ந்தவா் நவீன் (35). இவரது மனைவி லட்சுமி (25). இவா்களது மகள் ஸ்ரீமதி (6). மூவரும் புதன்கிழமை காலை பைக்கில் சோளிங்கரில் இருந்து வாலாஜா நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அப்போது புத்தேரி பேருந்து நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த காா், அதிவேகமாக வந்து, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நவீன் மற்றும் அவரது மகள் ஸ்ரீமதி ஆகியோரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. லட்சுமியின் வலது கால் பாதம் மிகவும் பாதிக்கப்பட்டது.

அவா்களை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு, சோளிங்கா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளித்த பின்னா் மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT