பொன்னேரி: வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது.
இங்கு முதல் யூனிட்டில் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டாவது யூனிட்டில் இரண்டாவது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதை சீரமைக்கும் பணியில் மின் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.