திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி மகன் பிரசாந்த்(32). இந்த நிலையில், சொந்த வேலை காரணமாக புன்னப்பாக்கம் கிராமத்திலிருந்து திருவள்ளூா் நோக்கி புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, எதிரே வேகமாக வந்த டிராக்டா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக அவரது தாயாா் மாலா புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.