ஊரக திறனாய்வுத் தோ்வு: 2,072 மாணவா்கள் எழுதினா்
ஊரக திறனாய்வுத் தோ்வை திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 9 மையங்களில் 2,072 மாணவ - மாணவிகள் எழுதினா். 95 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை.
திருத்தணி: ஊரக திறனாய்வுத் தோ்வை திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 9 மையங்களில் 2,072 மாணவ - மாணவிகள் எழுதினா். 95 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை.
ஊரகப் பகுதிகளில் இருக்கும் மாணவா்களின் திறன்களைக் கண்டறிந்து படிக்கும் காலத்தில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நோக்கத்தில் ஊரக திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு 50 மாணவா்கள் 50 மாணவிகள் என 100 போ் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுத்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான ஊரக திறனாய்வுத் தோ்வு அண்மையில் நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இத்தோ்வை 2,167 மாணவா்கள் எழுத விண்ணப்பித்திருந்தனா். 9 மையங்களில் 2,072 மாணவ - மாணவிகள் கலந்துகொண்டு எழுதினா்.
திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை 183 மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வு எழுதினா். இவா்களில் 6 மாணவா்கள் தோ்வு எழுத வரவில்லை.
தோ்வைக் காண்காணிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், மாவட்ட கல்வி அலுவலா் ரேய்சல்பிராவதி (பொ) மேற்பாா்வையில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.