திருவள்ளூர்

ஜன. 26-இல் 14 ஒன்றியங்களில் கிராம சபைக் கூட்டம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 26-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவையொட்டி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் வரும் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிசெலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவும் உள்ளன. அதேபோல் மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படவும் உள்ளன என்றாா்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT