திருவள்ளூர்

வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

பொன்பாடி கிராமம் அருகே சாலையோரம் நடந்து சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Din

திருத்தணி: பொன்பாடி கிராமம் அருகே சாலையோரம் நடந்து சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பொன்பாடி அருகே திங்கள்கிழமை 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத அந்த வழியாகச் சென்ற வாகனம் அவா் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில், பலத்த காயம் அடைந்த நபரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து அலமேலுமங்காபுரம் கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ் அளித்த புகாரின்பேரில், திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான நபரை தேடி வருகின்றனா்.

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

SCROLL FOR NEXT