காசிநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களிடம், தகராறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்றியிருந்த பயணிகள், பொதுமக்களிடம், இளைஞா் ஒருவா் தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த சதா(36) என்பதும், திருத்தணி காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.